சிறுகதை எழுத மட்டும் – நாவல் எழுத மட்டும் – அபுனைவு எழுத மட்டும் என்று தனித்தனியே கற்க முடியாதா? மொத்தமாகத்தான் கற்க வேண்டுமா?
இப்பயிற்சி வகுப்புகளின் நோக்கம், வெற்றிகரமான எழுத்தின் அடிப்படைகளைச் சொல்லித் தருவது. அடிப்படை புரிந்துவிட்டால் ஒவ்வொரு துறையிலும் நுட்பங்களை அணுகிப் பயில்வது சுலபம். தனித்தனி வகுப்புகள் பிறகு வரலாம். இப்போது இல்லை.
இலக்கியமெல்லாம் சொல்லிக் கொடுத்து எழுத வராது என்கிறார்களே?
இது இலக்கிய வகுப்பல்ல. பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், சமூக வெளி, ஓடிடி, புத்தகத் துறை, விளம்பரத் துறை எனப் பல்வேறு தளங்களில் எழுதத் தெரிந்தவர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. முறையான எழுத்துப் பயிற்சியின் மூலம் சரியான வாய்ப்புகளைப் பெற முடியும். மக்கள் விரும்பும் வெற்றிகரமான எழுத்தாளராக நீங்கள் உருவாக இந்த வகுப்புகள் உதவும்.
இந்த வகுப்பில் சேருவதன் மூலம் எனக்கு என்ன கிடைக்கும்?
* எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது என்ற தெளிவு முக்கியமாகக் கிடைக்கும்
* எதை எப்படி எழுதினால் ரசிப்பார்கள் என்ற நுட்பம் பிடிபடும்
* சொற்களை இடத்துக்கு ஏற்ப எப்படிக் கையாள்வது என்று புரியும்
* கதைகள், கட்டுரைகள் எழுதப் பயிற்றுவிக்கப்படும்
* கடினமான விஷயங்களைச் சுருக்கமாக, எளிமையாகச் சொல்வது எப்படி என்று தெரிந்துகொள்வீர்கள்
* உங்கள் எழுத்தைக் கொண்டே எழுதியது நீங்கள்தான் என்று அடையாளம் காணும் விதத்தில் எழுதுவது எப்படி என்று கற்பீர்கள்.
பதினாறு மணி நேர வகுப்பு என்பது எப்படி நடைபெறும்?
சனி-ஞாயிறுகளில் மட்டும் இந்திய நேரம் மாலை 7 முதல் 9 மணிவரை வகுப்பு நடக்கும். ஒவ்வொரு வகுப்பும் இரண்டு + இரண்டு மணி நேரம். இப்படி நான்கு வாரங்கள் – எட்டு வகுப்புகள்.
வகுப்பில் வேறென்னவெல்லாம் உண்டு?
ஒவ்வொரு நாளும் வகுப்பு நேரத்துக்குப் பிறகு கேள்வி நேரம், விவாத நேரம் உண்டு. சந்தேகங்களைக் கேட்டுத் தெளியலாம். சில வீட்டுப்பாடங்கள் தரப்படும். அவற்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் உங்களுக்கான வாய்ப்புகள் சுட்டிக்காட்டப்படும்.
வகுப்புக்கு வந்தால் மெட்ராஸ் பேப்பரில் எழுத இடம் கிடைக்குமா?
உத்தரவாதம் கிடையாது. வகுப்பில் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து, பயிற்சிப் பாடங்களைச் சரியாகவும் நேர்த்தியாகவும் செய்து, கவனம் கவர்ந்தால் பத்திரிகை எழுத்துக்குப் பயிற்சி தந்து வாய்ப்பும் தரப்படும். இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட தேர்வு மட்டுமே. வேறு குறுக்கு வழியே கிடையாது.
வகுப்புக்கு வந்தால் புத்தகம் வெளியிடுவீர்களா?
வாய்ப்பில்லை. மெட்ராஸ் பேப்பரில் தொடர்ச்சியாக எழுதுவோரில் தனிச் சிறப்புடன் வெளிப்படுவோரின் முதல் புத்தகங்களை மட்டுமே மெட்ராஸ் பேப்பர் வெளியிடும். அதுவும் அபுனைவு நூல்கள் மட்டும்தான். கதை-கவிதைகள் கண்டிப்பாகக் கிடையாது.
கட்டணம் செலுத்தி வகுப்பில் சேர்ந்துவிட்ட பிறகு ஓரிரு வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் போனால் என்ன செய்வது?
பதிவு செய்யப்பட்ட விடியோ தரப்படும்.
பாடத்திட்டம் எழுத்து வடிவில் கிடைக்குமா?
அனைத்த வகுப்புகளும் முடிந்தபின்பு கிடைக்கும்.
இந்தப் பயிற்சி வகுப்பில் சேர்வதால் மட்டுமே நான் எழுத்தாளராகிவிட முடியுமா?
பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிக்கூடத்திலும் பிறகு ஏதாவது கல்லூரியிலும் படித்துவிடுவதால் நீங்கள் உலக வங்கித் தலைவராகிவிட முடியுமா? அது போலத்தான் இது. உங்கள் இயல்பான எழுத்தார்வத்தை சரியான பாதையில் திருப்பிவிடுவதே இப்பயிற்சி வகுப்புகளின் நோக்கம். தொடர்ந்த, நீடித்த, சரியான முயற்சிகளும் புதிய அணுகுமுறைகளுமே வெற்றிகரமான எழுத்தாளராக உங்களை நிலை நிறுத்தும். அதற்கான அடித்தளம் நிச்சயம் இந்த வகுப்பில் அமைத்துத் தரப்படும்.
பயிற்சிக் கட்டண விவரங்களை எப்படிப் பெறுவது?
+91 8610284208 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்து விவரம் பெறலாம்.
__
எழுத்துப் பயிற்சி வகுப்புகள் குறித்த அனைத்து சந்தேகங்களையும் கேட்டறியவும் கட்டண விவரங்கள், வகுப்பு தொடங்கும் தேதி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளவும் +91 8610284208 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்க.
