Welcome to WordPress! This is your first post. Edit or delete it to take the first step in your blogging journey.
Bukpet
Digial Publishing Media
recent posts
about
-
பா. ராகவனின் அனைத்து நூல்களும் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் மூலம் வெளியாகின்றன. தற்போது முப்பது நூல்களின் புதிய மறு பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன. மற்றவை விரைவில் வெளி வரும்.
-
எழுத்து ஒரு கலை. ஊற்றுப் போலத் தன்னியல்பாகப் பொங்கி வருவது என்று யாராவது சொன்னால் முழுக்க நம்பாதீர்கள்.
எழுத்து ஒரு நுட்பமும் கூட. முறையான பயிற்சிகளின் மூலம் அதன் அடிப்படைகளை அறிய முடியும். இடைவிடாத முயற்சிகளின் மூலம் சிகரம் தொட முடியும்.
உலக அளவில் எழுதச் சொல்லித்தரும் அமைப்புகள், நிறுவனங்கள் பல உள்ளன. மிகப்பெரிய எழுத்தாளர்கள், இலக்கிய ஆசிரியர்கள் அங்கே மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். ஆனால் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டும்தான். ஆங்கிலத்தில் எழுதுவோருக்கு மட்டும்தான்.
தமிழில் ஒரு தொழில் முறை எழுத்துப் பயிற்சி வகுப்பை BUKPET முன்னெடுக்கிறது.
இதுவரை எதுவுமே எழுதியிராதவர்கள். ஆனால் எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள்.
எழுத முயற்சி செய்துகொண்டிருப்பவர்கள். ஆனால் சரியாக வரவில்லை என்று கவலைப்படுபவர்கள்.
ஒரு சில பிரசுரங்கள் நடந்திருக்கின்றன; ஆனாலும் உரிய கவனம் கிடைக்கவில்லை என்று வருந்துபவர்கள்.
நிறைய பிரசுரமாகியிருக்கிறது; ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறது என்று தவிப்பவர்கள்.
தோன்றிற் புகழொடுதான் தோன்றுவேன் என்ற திட சித்தமுடன் களமிறங்குபவர்கள்.
எழுத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் முயற்சி செய்து பார்க்கவும் சாதனை புரியவும் ஆர்வம் கொண்டவர்கள்.
சலிக்காமல் எழுதத் தயாராக இருப்பவர்கள். பரீட்சைகளில், புதிய முயற்சிகளில் வேட்கை கொண்டவர்கள்.
அனைத்துக்கும் மேலாக, நமக்குப் பிறகு நம் பெயர் நிலைத்திருக்க உறுதியாக நமது எழுத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள்.
இவர்கள் அத்தனை பேருக்கும் இந்த வகுப்பு உதவும்.
தனது முப்பதாண்டுக் கால எழுத்து மற்றும் இதழியல் அனுபவங்களின் அடிப்படையில் பா. ராகவன் இவ்வகுப்புகளுக்காகப் பிரத்தியேகமாகப் பாடத்திட்டங்களை உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் சனி-ஞாயிறுகளில் மட்டும் ஆன்லைன் மூலம் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
மேலும் விவரங்கள் அறிய Bukpet-இன் writeRoom தளத்துக்குச் செல்க. அல்லது +91 8610284208 என்னும் writeRoom-இன் வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
-
‘ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்’ அச்சுப் பதிப்பு ஜீரோ டிகிரி பப்ளிஷிங்கில் வெளியாகியுள்ளது. நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே செல்லவும்.