
இது என் முதல் சிறுகதைத் தொகுப்பு. இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னால் எழுதியவற்றை இப்போது படித்துப் பார்ப்பது பேரனுபவமாக இருக்கிறது. அன்றைய என்னுடைய சிறுகதைகள் இப்போதும் எனக்குப் பிடிக்கிறது. ஒவ்வொரு கதையைப் படிக்கிறபோதும், எழுதியபோது இருந்த மனநிலையை நினைவுகூர முடிகிறது. இன்று என்னால் சற்றும் பொருந்திப் போகமுடியாத பல கருத்துகளை அன்று மிக வலுவாக எழுத்தில் பதிவு செய்திருக்கிறேன். வருத்தமேதுமில்லை. அன்று நான் அவ்வாறுதான் இருந்திருக்கிறேன். அதையும் எண்ணிப் பார்த்து ரசிக்க முடிகிறது.