ட்விட்டர்-ஃபேஸ்புக் குறிப்புகளின் தொகுப்பு

- 14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள்
- 143: 143 - Twitter Kurippugal
- நகையலங்காரம்
- அபாயகரம்
- நீங்கள் என்னிடம் ஜேப்படி செய்தவற்றின் பட்டியல் பின்வருமாறு
ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் இதுவரை நான் எழுதியவற்றில் தேர்ந்தெடுத்த குறிப்புகளின் தொகுப்புகளாக மூன்று புத்தகங்கள் வெளியாகியுள்ளன. குற்றியலுலகம், சந்து வெளி நாகரிகம், 14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள். இம்மூன்று நூல்களின் தொகுப்பு என்று இந்நூலைச் சொல்லலாம். சில திருத்தங்கள், மாற்றங்கள் செய்திருக்கிறேன். பல ட்விட்களை நீக்கியிருக்கிறேன். இந்தப் புத்தகங்கள் வெளியான காலத்துக்குப் பிறகு எழுதிய குறிப்புகளில் இருந்தும் தேர்ந்தெடுத்துச் சிலவற்றைச் சேர்த்திருக்கிறேன். எனவே இதைப் பழைய புத்தகம் என்றோ, புதிய புத்தகம் என்றோ எளிதில் வகைப்படுத்திவிட முடியாது. முழுத் தொகுப்பு என்றும் சொல்வதற்கில்லை. இதற்கப்புறமும் நிறைய வரும் என்பதால். ஒரு சௌகரியத்துக்கு அடைமொழி ஏதுமின்றிப் ‘புத்தகம்’ என்று மட்டும் சொல்லிக்கொள்ளலாம்.
இருபதாண்டுக் காலமாக சமூக வலைத்தளங்களை எழுத்துப் பயிற்சிக்கு மட்டும் பயன்படுத்தி வந்திருக்கிறேன். எந்தக் கட்டுப்பாடுமின்றி விதவிதமான பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறேன். அவற்றை இப்படி மொத்தமாகத் தொகுத்துப் படித்துப் பார்ப்பது எனக்கு சுவாரசியமாக இருக்கிறது. வாசகர்களுக்கும் அதே சுவாரசியம் கிடைக்குமானால் மகிழ்ச்சி.