
சமணம்: ஓர் எளிய அறிமுகம்
ஹிந்து மதம் தோன்றிய காலத்தை எப்படி வரையறுக்க முடியாதோ, அதே போலத்தான் ஜைன மதத்தின் (சமணம்) காலமும். சுமார் ஐயாயிரம் வருடப் பழமை மற்றும் பாரம்பரியம் கொண்டது.
சமண மதத்தின் இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான வர்த்தமானர், அஹிம்சையையே அம்மதத்தின் ஆதாரக் கொள்கையாக நிறுவினார். கொல்லாதே. இம்சிக்காதே. சமணம் இதனைத்தான் அழுத்தம் திருத்தமாக போதிக்கிறது.
மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று சமணம் வகுத்துத் தரும் வழிகள் அற்புதமானவை. கண்ணுக்குத் தெரியாத கடவுளை நோக்கி அல்ல; கண்ணுக்குப் புலப்படும் இவ்வுலக வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ள, அதன்மூலம் பிறவா நிலையை அடைய வழிகாட்டுகிறது.
மாணவர்களுக்காக எழுதப்பட்ட இந்நூல் சமணம் குறித்த மிக எளிய புரிதலுக்கு மட்டுமானது ஆகும்.