
பா. ராகவனின் 'ஊர்வன', 1998ம் ஆண்டு 'ஒளிப்பாம்புகள்' என்ற தலைப்பில் கல்கியில் வெளியானதொரு குறுநாவல்.
மேலோட்டமான பார்வையில் இக்குறுநாவல் பேசுகிற விஷயம் பாலியல் சார்ந்ததாகத் தென்பட்டாலும் இதன் உள்ளடுக்குகள் தொடுகிற உயரங்கள் வேறு. ஒரு மலைக் கிராமத்தில் ஒரு சாமியார் நடத்தும் பள்ளிக்கூடத்துக்குத் தலைமை ஆசிரியராகப் பணியாற்ற வரும் ஒருவனின் அனுபவங்களின் ஊடே தாந்திரிகப் புதிர்ப்பாதையின் அபாயகரமான ஆழங்களைத் தொட்டுக்காட்டுகிறது இது.
இருபத்திரண்டு வருடங்களுக்குப் பின்பு முதல் முறையாக மீள் பிரசுரமாகும் இக்குறுநாவல் பெருமளவு திருத்தி எழுதப்பட்டது என்பது ஒரு தகவலுக்காக